11-ந் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்


11-ந் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்
x

நெல்லை மாவட்டத்தில் 11-ந் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட திசையன்விளை, பணகுடி மற்றும் களக்காடு துணை மின் நிலையங்களில் வருகிற 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே அங்கிருந்து மின் வினியோகம் பெறும் திசையன்விளை, மகாதேவன்குளம், இடையன்குடி, அப்புவிளை, ஆனைகுடி, முதுமொத்தான்மொழி, பணகுடி, லெப்பைகுடியிருப்பு, புஷ்பவனம், குமாந்தான், காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன்குளம், கோதைசேரி, வன்னியன்குடியிருப்பு, சிங்கிகுளம், களக்காடு, காடுவெட்டி, வடமலைசமுத்திரம், கள்ளிகுளம், மீனவன்குளம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம் மற்றும் பக்கத்து கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இத்தகவலை வள்ளியூர் மின் வினியோக செயற்பொறியாளர் வளனரசு தெரிவித்துள்ளார்.


Next Story