திருச்செந்தூர் கோட்டத்தில் வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
திருச்செந்தூர் கோட்டத்தில் வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோட்ட மின் வினியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட திருச்செந்தூர், ஆறுமுகநேரி, சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி பகுதிகளில் சீரான மின்வினியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள் மின்பாதைகளில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை அகற்றுதல், சேதமடைந்துள்ள இழுவை கம்பிகளை சீரமைத்தல், தொய்வாக உள்ள மின்பாதைகளை சரி செய்தல் போன்ற பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கின்றன.
எனவே வீரபாண்டியன்பட்டணம், ராஜ்கண்ணாநகர், குறிஞ்சி நகர், திருச்செந்தூர்-காயல்பட்டினம் மெயின் ரோடு, வன்னியங்காடு, பள்ளத்தூர், மணக்காடு, வன்னிமாநகரம், குடியிருப்புவிளை, கீழபள்ளிபத்து, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, சீயோன் நகர், நா.முத்தையாபுரம், பிச்சிவிளை, நாலுமூலைக்கிணறு, காட்டுமொகுதூம்பள்ளி, எஸ்.எஸ்.கோவில் தெரு, அங்கமங்கலம், சுந்தர்ராஜபுரம், கோட்டார்விளை, விஜயராமபுரம், சிறப்பூர், பண்டாரபுரம், கட்டாரிமங்கலம், அறிவான்மொழி, தேரிப்பனை, வைத்தியலிங்கபுரம், ஆதிநாபுரம், செம்பூர், லெட்சுமிபுரம், மெஞ்ஞானபுரம், நங்கைமொழி, இலங்கநாதபுரம், அனைத்தலை, அடைக்கலாபுரம் (மெஞ்ஞானபுரம்), குமாரசாமிபுரம், மருதூர்கரை, உடன்குடி புதுத்தெரு, களம்புதுத்தெரு சந்தைகடை தெரு, கூலத்தெரு மேற்கு, மெய்யூர், கடாட்சபுரம், உசரத்துகுடியிருப்பு, தோப்புவிளை, பெரியதாழை, செட்டிவிளை மற்றும் தச்சன்விளை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.