திருச்செந்தூர் கோட்டத்தில் சனிக்கிழமை மின் தடை ஏற்படும் இடங்கள்
திருச்செந்தூர் கோட்டத்தில் சனிக்கிழமை மின் தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோட்ட மின் விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட திருச்செந்தூர், ஆறுமுகநேரி, சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி பகுதிகளில் சீரான மின்விநியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள் மின்பாதைகளில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை அகற்றுதல் சேதமடைந்துள்ள இழுவை கம்பிகளை சீரமைத்தல் தொய்வாக உள்ள மின்பாதைகள் போன்ற பணிகள் இன்று(சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட இருக்கிறது.
எனவே, திருச்செந்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சாலை, மேலரதவீதி, வாய்க்கால் தெரு, முத்துநகர், சண்முகபுரம், தண்டுபத்து, வெள்ளாளன்விளை, சீயோன்நகர், நா.முத்தையாபுரம், நாலுமூலைக்கிணறு, லெட்சுமிபுரம், ரத்னாபுரி, மேலஆத்துர், சேதுக்குவாய்த்தான், முதலுர், தருமபுரி, புதுக்குளம், சவேரியார்புரம், மீரான்குளம், வாழையடி, அகப்பைக்குளம், குரங்கனி, இலங்கநாதபுரம், ராமலிங்கபுரம், நங்கைமொழி, செல்வாசிட்டி, பரமன்குறிச்சி சாலை, செட்டியாபத்து, தோப்புவிளை, செட்டிவிளை, இடச்சிவிளை, பூச்சிக்காடு ஆகிய ஊர்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.