வங்கியில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 5 பேர் கைது


வங்கியில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 5 பேர் கைது
x

வங்கியில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை
சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் ஆகியோர் தலைமையில் போலீசார் இடையமேலூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கண்டாங்கிபட்டி அருகில் உள்ள முந்திரி தோப்பு பகுதியில் ஒரு கும்பல் கையில் பயங்கர ஆயுதங்களுடன் அமர்ந்திருந்தனர். போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சோனைமுத்து (வயது 27), சிவகங்கை அடுத்த தேவனிப்பட்டி விக்னேஸ்வரன் (27), ராஜ்குமார் (24), சிவகங்கை மேலரத வீதி சபரி வேலன் (19), காளையார்கோவிலை அடுத்த பள்ளிதம்பத்தைச் சேர்ந்த ராஜேஷ் (36) ஆகியோர் என்பதும், இவர்கள் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும், மேலும் அப்பகுதியில் உள்ள ஒரு வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது ெசய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் நான்கு அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில், ராஜேஷ் இரும்பு ஆயுதங்கள் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் தான் அவர்களுக்கு வாள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை செய்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story