திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல் வாக்காளர் பட்டியல்


திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல் வாக்காளர் பட்டியல்
x

தஞ்சை மாவட்டத்தில் திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார். இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் 486 பேர் தகுதியானவர்கள் ஆவர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை மாவட்டத்தில் திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார். இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் 486 பேர் தகுதியானவர்கள் ஆவர்.

திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தஞ்சை மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான ஊரகப்பகுதி மற்றும் நகர்ப்புறப் பகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-தஞ்சை மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலில், மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் 28 பேர், தஞ்சாவூர் மாநகராட்சி வார்டு கவுன்சிலர்கள் 51 பேர், கும்பகோணம் மாநகராட்சி வார்டு கவுன்சிலர்கள் 48 பேர், பட்டுக்கோட்டை நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் 33 பேர், அதிராம்பட்டினம் நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் 27 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

பேரூராட்சி கவுன்சிலர்கள்

மேலும் மாவட்டத்தில் உள்ள 20 பேரூராட்சிகளில் உள்ள வார்டு கவுன்சிலர்கள் 299 பேர் என மொத்தம் 486 பேர் வாக்காளர்களாக உள்ளனர். மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளில் வெளியிடப்பட்டுள்ளது.தஞ்சை மற்றும் கும்பகோணம் மாநகராட்சி அலுவலகங்கள், தஞ்சை மாவட்ட ஊராட்சி அலுவலகம், பட்டுக்கோட்டை மற்றும் அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் 20 பேரூராட்சி அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில் தேர்தல் தாசில்தார் ராமலிங்கம், மாநகராட்சி ஆணையர்கள், நகராட்சி ஆணையர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு செயலர், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிகள் கலந்துகொண்டனர்.


Next Story