மக்களுக்கு அடிப்படை தேவைகள் கிடைக்க திட்டமிட வேண்டும்


மக்களுக்கு அடிப்படை தேவைகள் கிடைக்க திட்டமிட வேண்டும்
x

மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப அடிப்படை தேவைகள் கிடைக்க திட்டமிட வேண்டும் என கலெக்டர் பேசினார்.

வேலூர்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு குறித்து மாவட்ட திட்டக்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாபு, திட்டக்குழு அலுவலர் ரமாமணி, புள்ளியியல்துறை துணை இயக்குனர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி பேசுகையில், இந்த திட்டத்தின் நோக்கம் வரும் காலங்களில் மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அனைத்து மக்களுக்கும் உணவு, கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை தேவைகள் முழுமையாக கிடைக்க திட்டமிட வேண்டும். ஏழ்மை, பட்டினியை ஒழிக்க வேண்டும். உணவு பாதுகாப்பையும், ஊட்டச்சத்து மேம்பாட்டையும் அடையவும், நிலையான வளம்குன்றாத வேளாண்மையை மேம்படுத்த வேண்டும். அனைவருக்கும் தரமான கல்வியை உறுதி செய்ய வேண்டும். அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்குதல், உட்கட்டமைப்பை உருவாக்குதல், நிலையான தொழில் மயமாதலையும் மற்றும் புதுமையான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இதில், ஊரகவளர்ச்சித்துறை, சுதாராப்பணிகள், மாநகராட்சி உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story