நாமக்கல்-பரமத்தி சாலையில் 1,100 மரக்கன்றுகள் நடும் திட்டம்-அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்
நாமக்கல்:
நாமக்கல்-பரமத்தி சாலை சந்தைபேட்டைபுதூர் முதல் வள்ளிபுரம் பைபாஸ் சாலை வரை சுமார் ரூ.25 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் 4 வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சாலையில் நாமக்கல் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு சார்பில் பசுமை சாலைகள் திட்டத்தின் கீழ் 1,100 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது.
இதன் முதற்கட்டமாக போதுப்பட்டி முதல் வள்ளிபுரம் வரை 686 மரக்கன்றுகள் நடும் பணியை தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். இந்த விழாவில் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம், கோட்ட பொறியாளர் துரை மற்றும் உதவி கோட்ட பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.