விஷம் வைத்து 4 ஆடுகளை கொன்ற தோட்ட உரிமையாளர்


விஷம் வைத்து 4 ஆடுகளை கொன்ற தோட்ட உரிமையாளர்
x

தட்டார்மடம் அருகே விஷம் வைத்து 4 ஆடுகளை கொன்ற தோட்ட உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகேயுள்ள பொத்தகாலன்விளை வடக்கு தெருவை சேர்ந்த சந்தனசிலுவை மகன் அலெக்டஸ்(வயது32). இவருக்கு சாத்தான்குளம் அருகே முதலூர் தர்மபுரி கிராமத்தில் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் தர்மபுரி கிராமத்தை சேர்ந்த பட்டுலட்சுமி, வீரலட்சுமி, ஆறுமுகம் ஆகிேயாருக்கு சொந்தமான 4 ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்றுள்ளன. அந்த ஆடுகள் சிறிது நேரத்தில் இறந்து கிடந்தன. இதுகுறித்து அறிந்த ஆடுகளின் உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குரூஸ்மைக்கேல் சம்பவ தோட்டத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இதில் ஆடுகள் விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து தோட்ட உரிமையாளரான அலெக்ஸ் மீது தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story