தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
சம்பளம் வழங்க கோரி தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நீலகிரி
கூடலூர்,
கூடலூர் தாலுகாவுக்கு உட்பட்ட தேவர்சோலையில் தனியார் தோட்ட தொழிலாளர்களுக்கு 2 மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்த தொழிலாளர்கள், சம்பளம் வழங்க கோரி தோட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தேவர்சோலை போலீசார் மற்றும் தோட்ட நிர்வாக பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து சம்பளம் வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு வேலைக்கு சென்றனர்.
Related Tags :
Next Story