குறவகுடி ஊராட்சியில் 3ஆயிரம் பனை விதைகள் நடும் விழா
குறவகுடி ஊராட்சியில் 3ஆயிரம் பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது
மதுரை
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி வட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் குறவகுடி ஊராட்சி விண்ணகுடி கிராமத்திலிருந்து கொடிக்குளம் விலக்கு வரை சாலை ஓரத்தில் 3 ஆயிரம் பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது. இதற்கு செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் ராமர், பிரேமா ஆகியோர் தலைமை தாங்கினர். உசிலம்பட்டி வட்டாட்சியர் சுரேஷ் முன்னிலை வகித்தார். செல்லம்பட்டி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் எம்.வி.பி.ராஜா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அவைத்தலைவர் பண்பாளன், கூட்டுறவு சங்கத்தலைவர் ரகு, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ஜெயசித்ரா, நடிகர் வீரசமர் மற்றும் கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story