2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி


2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி
x

வேலூர் மத்திய ஜெயில் வளாகத்தில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை டி.ஐ.ஜி. தொடங்கி வைத்தார்.

வேலூர்

வேலூர்

வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள், பெண்கள் ஜெயில் உள்ளது. இங்கு தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என்று 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். மத்திய ஜெயில் வளாகத்தில் 4 ஏக்கரில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு, அதில் விளையும் காய்கறிகள் கைதிகளின் உணவிற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய ஆண்கள், பெண்கள் ஜெயில்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்க ரூ.2 கோடியே 64 லட்சத்தில் கழிவுநீர் சுத்திகரிக்கும் ஆலை அமைக்கப்பட்டு, அதில் இருந்து வெளியேறும் நீர் விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜெயில் வளாகத்தை பசுமையாக்கும் நடவடிக்கையாக 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு வேலூர் சரக ஜெயில் டி.ஐ.ஜி. செந்தாமரை கண்ணன் தலைமை தாங்கி மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக நெல்லி, கொய்யா உள்ளிட்ட 150 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், வேலூர் மத்திய ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான், சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Related Tags :
Next Story