20 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி


20 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
x

20 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி

நாகப்பட்டினம்

வேதாரண்யம் நகராட்சி சார்பில் வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் புயல், வெள்ளம் மற்றும் பல்வேறு இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் போது இயற்கை அரணாக விளங்கும் பனைமரங்களை உருவாக்கும் முயற்சியில் 20 ஆயிரம் பனை விதைகளை நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பனைவிதைகள் நடும் பணியை நகராட்சி ஆணையர் ஹேமலதா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் புகழேந்தி, துணைத்தலைவர் மங்களநாயகி, நகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹீம், ஓவர்சியர் குமரன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

வேதாரண்யம் பகுதியில் சுற்றுச்சூழல் இயற்கை வளங்களை மேம்படுத்தும் வகையில் நகராட்சி மூலம் கடற்கரை முழுவதும் இந்த பணி மேற்கொள்ளபட்டது என நகராட்சி ஆணையர் ஹேமலதா தெரிவித்தார்.


Next Story