பனை மர விதைகள் நடும் பணி


பனை மர விதைகள் நடும் பணி
x

கண்மாயின் கரைப்பகுதியில் பனை மர விதைகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டது.

விருதுநகர்


விருதுநகர் அருகே சத்திரரெட்டியபட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பயனாளிகள் மூலம் வரத்து கால்வாய் சீரமைப்பு, கண்மாய் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அங்குள்ள கண்மாயின் கரைப்பகுதியில் பனை மர விதைகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை மர விதைகள் நடப்பட்டது. இதனை ஊராட்சி மன்ற தலைவர் மருதுராஜ் தொடங்கி வைத்தார். இதில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பயனாளிகள் மற்றும் தன்னார்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story