அண்ணாமலை பல்கலைக்கழக மாணவிகள் நடவு பணி
புத்தூர் கிராமத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவிகள் நடவு பணி நடந்தது
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் கிராமத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்மை துறை இளங்கலை இறுதி ஆண்டு மாணவ-மாணவிகள் கிராமங்களில் தங்கி வேளாண்மை குறித்து பயிற்சி நடைபெற்று வருகின்றனர். இதில் மாணவர்கள் புத்தூர் கிராமத்தில் சம்பா சாகுபடி செய்யும் முறை மற்றும் திருந்திய நெல் சாகுபடி குறித்து தொழில்நுட்பங்களை விளக்கிப் பேசினார்கள். இதில் அந்த கிராமத்தில் திருந்திய நெல் சாகுபடி முறையில் நடவு நாடும் பணியை மாணவ, மாணவிகள், வயலில் இறங்கி நடவு செய்தனர். மாணவ மாணவிகளுக்கு அப்பகுதி விவசாயிகள் புதிய தொழில்நுட்பம் குறித்தும் உர செலவுகளை குறைத்து அதிக லாபம் எவ்வாறு இயற்றலாம் என்பது குறித்தும். மண் மற்றும் நீர்பரிசோதனை குறித்தும் இயற்கை வழி உரங்களை பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிப்பது குறித்தும் மற்றும்விவசாயிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னோடி விவசாயிகள். கல்லூரி பேராசிரியர்கள். மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.