மின்மாற்றியில் செடி, கொடிகள் படர்ந்து காணப்படும் அவலம்
மயிலாடுதுறை அருகே மின்மாற்றியில் செடி, கொடிகள் படர்ந்து காணப்படும் அவலநிலை
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே நீடூர் சபியா தெரு உள்ளது. இந்த பகுதியில் சுமார் 100-கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் வினியோகம் செய்வதற்கு இந்த பகுதியில் ஒரு மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியில் செடி, கொடிகள் மேல் பகுதி வரை படர்ந்து காணப்படுகின்றன. இதனால் இந்த மின்மாற்றி அடிக்கடி பழுதாவதால் மின்சாரமின்றி அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாக தெரிவிக்கின்றனர்.மேலும் மழைநேரங்களில் மின்கம்பிகளில் உரசும் பச்சை கொடிகளால் விபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் அச்சப்படுகின்றனர். எனவே இப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி மின் மாற்றியில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி, அடிக்கடி பழுது ஏற்படாமல் பராமரிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story