கருகிய நிலையில் உள்ள செடிகள்


கருகிய நிலையில் உள்ள செடிகள்
x

பேராவூரணி முதன்மை சாலை சென்டர் மீடியனில் கருகிய நிலையில் உள்ள செடிகளை காப்பாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தஞ்சாவூர்

பேராவூரணி;

பேராவூரணி முதன்மை சாலை சென்டர் மீடியனில் கருகிய நிலையில் உள்ள செடிகளை காப்பாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பூச்செடிகள்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் முதன்மைச் சாலையில் சாலைகள் விரிவுபடுத்தி சென்டர் மீடியன் அமைத்து தற்போது போக்குவரத்து எவ்வித பாதிப்பும் இல்லாமல், சென்று வருகின்றன.இந்த நிலையில் முதன்மைச் சாலையில் பேராவூரணி பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி பட்டுக்கோட்டை சாலை ஆண்டவன் கோவில் காட்டாற்று பாலம் வரை சென்டர் மீடியன் அமைத்து சென்டர் மீடியன் நடுவில் மண்களை போட்டு பூச்செடிகள் அமைத்தனர். இந்த பூச்செடிகள் முறையாக பராமரிக்கப்படாமல், செடிகள் வளர்வதற்கு முறையாக மண்களை கொட்டாமல், கிராவல், புழுதி போன்ற மண்களை கொட்டி பூச்செடிகள் சீரற்ற முறையில் ஒன்று வளர்ந்தும் மற்றொன்று கருகியும் வாடியும் காணப்படுகிறது. பல்வேறு நகரங்களில் நெடுஞ்சாலைகளில் வளரும் அல்லி செடியானது பூக்கள் பூத்து நகர் பகுதிக்குள் வருபவர்களை வரவேற்கும் விதமாக அழகான முறையில் பராமரித்து பூஞ்சோலையாக காணப்படுகின்றன .

பராமரிக்க வேண்டும்

இதைப்போல பேராவூரணியிக்கு வருபவர்களை வரவேற்கும் விதமாக இந்த செடிகளை வளர்த்து முறையாக பராமரிக்க வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இந்த சென்டர் மீடியினில் அல்லி செடிகள் பூச்செடிகள் வளர்வதற்கான மண்களை நிரப்பி, தேவையற்ற மண்களை அகற்றி முறையாக செடிகளை வைத்து, தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story