வாணியம்பாடி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி


வாணியம்பாடி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி
x

வாணியம்பாடி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

வாணியம்பாடி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

வாணியம்பாடி நகராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் தமிழகத்தில் மஞ்சள் பை திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவுற்றதை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு நகர கூட்டுறவு வங்கி தலைவரும், நகர மன்ற உறுப்பினருமான வி.எஸ்.சாரதி குமார் தலைமை தாங்கினார். நகராட்சி பொறியாளர் சங்கர் முன்னிலை வகித்தார், நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மஞ்சள்பை உபயோகப்பதன் மூலம் பிளாஸ்டிக் ஒழிப்பது குறித்து விளக்கி கூறப்பட்டது. தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.எஸ்.சாரதி குமார் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. பயன்படுத்தக்கூடாத பொருட்கள் எவை எனவும், பயன்படுத்தப்படுத்தி மக்கும் பொருட்கள் எவை எவை எனவும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி சுகாதார அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



Next Story