Normal
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ஆறுமுகநேரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தூத்துக்குடி
ஆறுமுகநேரி:
ஆத்தூர் நகரப்பஞ்சாயத்து சார்பில் மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை நிறைவேற்ற வேண்டி பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியானது ஆத்தூர் நகரப்பஞ்சாயத்து அலுவலகம் முன்பு இருந்து புறப்பட்டது. ஆத்தூர் நகரப்பஞ்சாயத்து தலைவர் கமால்தீன் பேரணியை தொடங்கி வைத்தார். பேரனியில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். நகரப்பஞ்சாயத்து உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள், சமூக நல ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். மெயின் ரோடு வழியாக பேரணி சென்று நான்கு ரதவீதிகளில் சுற்றி ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்தடைந்தது. பேரனியில் ஆத்தூர் நகரப்பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி முருகன், துணை தலைவர் மகேஸ்வரி முருகப்பெருமான், மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story