பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 14 Nov 2022 12:15 AM IST (Updated: 14 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பட்டிவீரன்பட்டி அருகே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திண்டுக்கல்

பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள தேவரப்பன்பட்டி ஊராட்சி சின்னக்கவுண்டன்பட்டி, வினோபாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. இதற்கு இந்து நாடார்கள் உறவின்முறை சங்க துணைத்தலைவர் பிரசன்னா தலைமை தாங்கினார். பள்ளி செயலர் நிர்மல்ராஜீவ், தேவரப்பன்பட்டி ஊராட்சித் தலைவர் ரேவதி மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். இம்முகாமில் 'தூய்மை இந்தியா' என்ற தலைப்பின் அடிப்படையில் தூய்மை பணிகளை நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மேற்கொண்டனர். பின்னர் மாணவர்கள் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் நாசுருதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் மனிதர்களுக்கும், மண்ணுக்கும், சுற்றுப்புறங்களுக்கும் பல்வேறு தீமைகள் ஏற்படுகின்றன. அதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்க்க வேண்டும். மேலும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை பற்றி பொதுமக்களிடம் எடுத்துரைத்து அதனை சுகாதாரப் பணியாளாரிடம் முறையாக பிரித்து வழங்க அறிவுறுத்த வேண்டும் என்றார்.


பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பாதாகைகள் ஏந்தி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். முடிவில் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் சேதுராமன் நன்றி கூறினார்.





Next Story