பிளாஸ்டிக் இல்லா திருப்பத்தூர் மாவட்டம் மாரத்தான் போட்டி
பிளாஸ்டிக் இல்லா திருப்பத்தூர் மாவட்டம் மாரத்தான் போட்டியில் பொதுமக்கள் கலந்து கொள்ள கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக உருவாக்கிட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பிளாஸ்டிக் இல்லா திருப்பத்தூர் மாவட்டம் என்ற மாரத்தான் போட்டி நடக்கிறது. காலை 5.30 மணிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைக்கிறார்.
இதுதொடர்பாக கலெக்டர் கூறியதாவது:-
தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் பிளாஸ்டிக் இல்லா திருப்பத்தூர் மாவட்டம் என்ற மாரத்தான் போட்டி 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த விழிப்புணர;வு போட்டியில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், இளைஞர்கள், அரசுத்துறை அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
போட்டியில் கலந்து கொள்வதற்கு வயது வரம்பு, பதிவு கட்டணம் ஏதும் கிடையாது. முதலில் பதிவு செய்யும் 300 நபர்களுக்கு டீ சர்ட் வழங்கப்படும்.
இந்த விழிப்புணர்வு மாராத்தான் போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மஞ்சப் பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தை சார்ந்த அனைவரும் கலந்து கொண்டு பிளாஸ்டிக் இல்லாத திருப்பத்தூர் மாவட்டத்தை உருவாக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.