சுற்றுலா பயணிகளால் மலைபோல் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகள்


சுற்றுலா பயணிகளால் மலைபோல் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகள்
x

ஊட்டியில் சுற்றுலா பயணிகளால் மலைபோல் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்தது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் சுற்றுலா பயணிகளால் மலைபோல் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்தது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பிளாஸ்டிக் பயன்பாடு

தமிழக அரசு ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. அதற்கு முன்னரே நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதனால் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்தது. ஆனால் முற்றிலும் ஒழியவில்லை.

கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி கிடந்தது. தற்போது கொரோன பரவல் குறைந்ததால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. குறிப்பாக கோடை சீசனான கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் சுமார் 8 லட்சம் பேர் வந்து சென்றனர்.

சுற்றுச்சூழலுக்கு கேடு

அப்போது அவர்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக் பொருட்கள் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே குவிந்து கிடப்பதை காண முடிகிறது. இவ்வாறு மலைபோல் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தூய்மை பணியாளர்கள் சேகரித்து, அப்புறப்படுத்தி வருகின்றனர். தடை விதித்தாலும் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்வது நீலகிரியின் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

தீவிர கண்காணிப்பு

சமவெளி பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களுடன் வருகின்றனர். இதை தடுக்க கல்லாறு, பர்லியாறு, குஞ்சப்பனை உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு நடத்தப்படுகிறது. ஆனால் தீவிர கண்காணிப்பு இல்லாத நிலையில், பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்கிறது. நாட்டில் முதன்முதலாக அறிவிக்கப்பட்ட யுனெஸ்கோவின் உயிர்கோள காப்பகம் நீலகிரிதான். எனவே பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.


Next Story