விருதம்பட்டு பாலாற்றில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி
விருதம்பட்டு பாலாற்றில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி நடந்தது
வேலூர்
காட்பாடி
விருதம்பட்டு பாலாற்றில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி நடந்தது.
காட்பாடி என்.சி.சி 10வது பட்டாலியன் மாணவர்கள் மற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஆகியோர் இணைந்து விருதம்பட்டு பாலாற்றில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் தூய்மை பணியில்ஈடுபட்டனர்.
நிகழ்ச்சிக்கு பட்டாலியன் கமாண்டிங் அலுவலர் லெப்டினன்ட் கர்னல் சஞ்சய் சர்மா தலைமை தாங்கினார். நிர்வாக அலுவலர் லெப்டினன்ட் கர்னல் சுந்தரம், மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் என்.சி.சி.மாணவர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றம் பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story