சின்னாறில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்


சின்னாறில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
x

சின்னாறில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

திருப்பூர்

தளி

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சின்னாற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டது.

உலக சுற்றுச்சூழல் தினம்

உலக சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக திருப்பூர் வனக்கோட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 13-ந் தேதி முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதன்படி நேற்று திருப்பூர் வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் க.கணேஷ்ராம் தலைமையில் உடுமலை வனச்சரகம் சின்னார் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டதுடன் சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு நிகிழ்ச்சியும் நடைபெற்றது.

மேலும் அமராவதி வனச்சரகம் கரட்டுப்பகுதி மலைவாழ் மக்கள் குடியிருப்பில் சூழல் மேம்பாட்டு குழு உறுப்பினர்களுடன் இணைந்து வனத் தீயை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டது. பின்னர் அமராவதி முதலைப் பண்ணையில் சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பதின் முக்கியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதே போல் கொழுமம் வனச்சரகம் குதிரையாறு அணைப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி நடைபெற்றது.

வனத்தீ

அத்துடன் வந்தரவு வனச்சரகம் நாட்டாமைப்பட்டி கிராமத்தில் வனத் தீயினால் ஏற்படுகின்ற தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட வனத்துறையினர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி 28-ந் தேதி வரைநடக்கிறது.



Next Story