பராமரிப்பின்றி கிடக்கும் விளையாட்டு மைதானம்


பராமரிப்பின்றி கிடக்கும்   விளையாட்டு மைதானம்
x
திருப்பூர்


விருகல் பட்டி ஊராட்சியில் கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம் புதர்மண்டி கிடக்கிறது.

விளையாட்டு மைதானம்

கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் ஊராட்சிகளிலும் கிராமப்புற விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டன.

விளையாட்டு மைதானங்கள் பல ஊராட்சிகளில் பராமரிப்பு இன்றி, முட்புதர்கள் மண்டி, உபகரணங்கள் சேதமடைந்தும், துருப்பிடித்தும் காட்சியளிப்பதால் பயிற்சி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ஊராட்சி தோறும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. ஊஞ்சல், சறுக்கு, பார், உடற்பயிற்சி செய்யும் வகையில் உபகரணங்கள் அமைக்கப்பட்டன.

இதன் மூலம் கிராமப்புற இளைஞர்கள் பயிற்சி பெற்று விளையாட்டில் சிறந்து விளங்குவதற்கு பயனுள்ளதாக இருந்தது.

அந்தந்த ஊராட்சி சார்பில் மைதானங்கள் பராமரிக்கப்பட்டன. காலப்போக்கில் பராமரிப்பு இன்றி முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது.

பராமரிக்க கோரிக்கை

இதன் காரணமாக விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உபகரணங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் துருப்பிடித்து காணப்படுகிறது.

போலீஸ் மற்றும் ராணுவ துறையில் வேலை வாய்ப்பு பெற முயற்சிக்கும் இளைஞர்கள் உடல் தகுதியை மேம்படுத்த முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவே கிராமப்புறங்களில் உள்ள விளையாட்டு மைதானங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொது மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Next Story