காவலர் குடியிருப்பில் விளையாட்டு பூங்கா


காவலர் குடியிருப்பில் விளையாட்டு பூங்கா
x

திருப்பத்தூர் காவலர் குடியிருப்பில் விளையாட்டு பூங்கா தொடங்கி வைக்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் தாலுகா காவலர் குடியிருப்பு மைதானத்தில் சிறுவர்களுக்கான பூங்கா அமைத்துதரக்கோரி குடியிருப்பில் வசிக்கும் போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கி.பாலகிருஷ்ணனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அதையொட்டி சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு, விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து புத்தாண்டை முன்னிட்டு சிறுவர் பூங்காவை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தொடக்கி வைத்தார். பின்னர், அங்கு வசிக்கும் குழந்தைகளுடன் விளையாடினார். மரக்கன்றுகளும் நட்டு வைத்தார். மேலும் குடியிருப்பில் வசிக்கும் காவலர்கள் குடும்பத்தினருடன் புத்தாண்டு கொண்டாடினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், துணைபோலீஸ் சூப்பிரண்டு கணேசன், இன்ஸ்பெக்டர் துரைராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story