மதுக்கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்- கலெக்டருக்கு மனு
மதுக்கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என கலெக்டருக்கு மனு அளிக்கப்பட்டது.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் மற்றும் அந்த அமைப்பினர் மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் - மன்னார்குடி சாலையில் உள்ள விளமல் போக்குவரத்து மிகுந்த பகுதியாகும். இங்கு அரசு அலுவலகங்கள், மருத்துவக்கல்லூரி இயங்கி வருகின்றன. இந்த பகுதி சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடைகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் இந்த பகுதியில் தொடர் விபத்துகளும், வழிப்பறி சம்பவங்களும் நடந்து வருகின்றன. எனவே இங்கு உள்ள மதுக்கடைகளை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story