கரும்பை சேர்த்து வழங்க வேண்டும்


கரும்பை சேர்த்து வழங்க வேண்டும்
x

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்த்து வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கொரடாச்சேரி;

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்த்து வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொங்கல் பரிசு

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பை சேர்த்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருவாரூரில் செங்கரும்புகளை கையில் ஏந்தி கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். இந்த மனுவில் அவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்த்து வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.

கரும்பு சாகுபடி

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம், மன்னார்குடி, குடவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல 100 ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் செங்கரும்பு விவசாயிகள் கலெக்்டர் அலுவலகத்தில் அரசு பொங்கல் தொகுப்பில் செங்கரும்பை சேர்த்து வழங்க வேண்டும். அதற்கு தேவையான செங்கரும்பை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். செங்கரும்பு பொங்கலுக்கு மட்டும் உதவக்கூடியது. மற்ற நேரங்களில் அது பயன்பாடு அற்று இருப்பதால் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்க வேண்டும்.

கோரிக்கை மனு

கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பு வழங்கப்பட்டது. இதனால் செங்கரும்பு விவசாயிகள் தமிழக அரசினை நம்பி கூடுதலான பரப்பளவில் செங்கரும்பு பயிரிட்டுள்ளனர். மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பை சேர்த்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் செங்கரும்போடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்்டர் காயத்ரி கிருஷ்ணனை சந்தித்து மனு அளித்துள்ளோம். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்்டர் காயத்ரிகிருஷ்ணன் இதுகுறித்து தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்துள்ளார். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


Next Story