கிருஷ்ணகிரியில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி:
சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாள் ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ந் தேதி சமத்துவ நாளாக அனுசரிக்கப்படுகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) அரசு விடுமுறை நாள் என்பதால் சமத்துவ நாள் உறுதிமொழி நேற்று எடுக்கப்பட்டது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் அனைத்து அரசு துறை அலுவலர்களும், சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு, மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார், உதவி இயக்குனர் (நில அளவை) சேகரன், துணை கலெக்டர் (பயிற்சி) தாட்சாயினி, கலெக்டர் அலுவலக மேலாளர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story