குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு


குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
x

விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு இருதயராஜ், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் தங்ககுருநாதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சேதுராமன், ரங்கராஜ் மற்றும் போலீசாரும், அமைச்சு பணியாளர்களும் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

அதாவது இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எவ்வித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என்றும், தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உறுதிமொழி ஏற்றனர்.


Next Story