மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளம்பர் பலி
மேலகிருஷ்ணன்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளம்பர் பலி
மேலகிருஷ்ணன்புதூர்,
நாகர்கோவில் அருகே உள்ள மாதவலாயம் பகுதியை சேர்ந்தவர் பாபு உசேன் அகமது கான் (வயது 41), பிளம்பர். இவர் தற்ேபாது பறக்கை பகுதியில் வசித்து வந்தார். கடந்த 15-ந் தேதி மாலை பாபுஉசேன் அகமதுகான் பிளம்பர் வேலைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி புறப்பட்டார். அப்போது சங்குத்துறை-மேலகிருஷ்ணன் புதூர் ரோட்டில் சென்ற போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பாபு உசேன் அகமது கான் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி பாபு உசேன் அகமது கான் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.