பிளஸ்-1 தேர்வு முடிவடைந்தது; மாணவ-மாணவிகள் கொண்டாட்டம்


பிளஸ்-1 தேர்வு முடிவடைந்தது; மாணவ-மாணவிகள் கொண்டாட்டம்
x

நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவடைந்தது.

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது.

தேர்வு முடிவடைந்தது

நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் மே மாதம் முழுவதும் நடைபெற்றது.

நேற்று முன்தினம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவடைந்தது. இந்த நிலையில் நேற்று பிளஸ்-1 பொதுத்தேர்வும் முடிவடைந்தது. பிளஸ்-1 தேர்வை 11,902 மாணவிகள், 10,831 மாணவர்கள் என மொத்தம் 22,733 பேர் எழுதினார்கள்.

மாணவர்கள் கொண்டாட்டம்

தேர்வு முடிவடைந்ததையொட்டி மாணவ-மாணவிகள் தங்களுடைய நண்பர்களிடம் பிரியா விடை பெற்றுச்சென்றனர். மீண்டும் 13 நாட்களில் சந்திப்பதாக இருந்தாலும் நினைவு பரிசுகளும் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். சிலர் அருகில் உள்ள ஐஸ்கிரீம் கடைகள், பேக்கரிகளுக்கு சென்றும் கொண்டாடினார்கள். இதுதவிர வழக்கம் போல் சட்டையில் பேனா மை தெளித்தல் மற்றும் முகத்தில் வண்ண பொடிகளை தூவுதல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றது.

போலீசார் கண்காணிப்பு

நேற்று முன்தினம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிந்த பிறகு பாளையங்கோட்டை பஸ் நிலையத்தில் நின்றிருந்த மாணவர்களுக்கு இடையே சாதி ரீதியிலான பிரச்சினை எழுந்து மோதலில் முடிந்தது.

அதே போன்ற சம்பவம் நேற்றும் நடந்து விடாமல் தடுக்கும் வகையில் பாளையங்கோட்டை பஸ் நிலையம், முருகன்குறிச்சி உள்ளிட்ட மாணவர்கள் கூடும் பகுதி மற்றும் பள்ளிக்கூட வாசல் பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டனர். அவர்கள் பள்ளியை விட்டு வெளியே வந்த மாணவ-மாணவர்களை உடனே வீட்டுக்கு செல்லுமாறு அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர்.


Next Story