கிணற்றில் குதித்து பிளஸ் 1 மாணவி தற்கொலை


கிணற்றில் குதித்து பிளஸ் 1 மாணவி தற்கொலை
x

விழுப்புரம் அருகே கிணற்றில் குதித்து பிளஸ் 1 மாணவி தற்கொலை

விழுப்புரம்

செஞ்சி

விழுப்புரம் அருகே உள்ள சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் மகள் டெல்பினா(வயது 17). இவர் ஒட்டம்பட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தாள். இவருக்கும், இவரது தாயார் ஜோஸ்பின் என்பவருக்கும் வீட்டில் சிறு சிறு பிரச்சினையால் வாய்த்தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற டெல்பினா வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிய நிலையில் நேற்று காலை அன்னியூர் கிராமத்தை சேர்ந்த எட்டியான் என்பவரது தரை கிணற்றின் அருகில் டெல்பினாவின் துப்பட்டா மற்றும் செருப்பு ஆகியவை இருந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த விழுப்புரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி நீரில் மூழ்கி பலியான டெல்பினாவின் உடலை கண்டெடுத்து கஞ்சனூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் டெல்பினாவின் தாய் திட்டியதால் மனமுடைந்து அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து டெல்பினாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார் இது குறித்து வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story