தோழி இறந்த துக்கத்தில் பிளஸ்-1 மாணவி தற்கொலை
மயிலாடுதுறையில் பள்ளி தோழி இறந்த துக்கத்தில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மயிலாடுதுறையில் பள்ளி தோழி இறந்த துக்கத்தில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பிளஸ்-1 மாணவி
மயிலாடுதுறை கூறைநாடு அண்ணா வீதியை சேர்ந்தவர் பாலா. இவருடைய மகள் ரக்சா (வயது 16). இவர் மயிலாடுதுறை நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் தன்னுடன் படித்து வந்த மயிலாடுதுறை அருகே ஆனதாண்டபுரம் கிராமத்தை சேர்ந்த புவனா என்ற மாணவியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். புவனா கடந்த மாதம் 12-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தனது நெருங்கிய தோழி புவனா இறந்ததை நினைத்து ரக்சா சோகத்தில் இருந்து வந்தார். மேலும் அடிக்கடி தனது தோழிகளிடம் புவனா இறந்ததை கூறி அழுதுள்ளார். இந்தநிலையில் புவனா இறந்த துக்கத்தில் இருந்த ரக்சா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சக தோழி இறந்த துக்கத்தில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.