விஷம் குடித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை


விஷம் குடித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை
x

ஆரணி அருகே விஷம் குடித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியை அடுத்த கல்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டம் என்பவரின் மகள் தர்ஷிகா (வயது 16). இவர் ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இவர் உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தர்ஷிகாவின் தாய் பிரியா ஆரணி தாலுகா போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story