பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

மணப்பாறை அருகே வாலிபருடன் பேசியதை தாய் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசாருக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி

மணப்பாறை அருகே வாலிபருடன் பேசியதை தாய் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசாருக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிளஸ்-1 மாணவி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மாகாளிப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வி. இவரது மகள் துர்காதேவி (வயது 16). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்தநிலையில் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற துர்காதேவி பள்ளிக்கு செல்லாமல் வாலிபர் ஒருவருடன் பேசியதாக தெரிகிறது. இதை செல்வி கண்டித்துள்ளார்.

நேற்று காலையில் செல்வி வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். இதற்கிடையே துர்காதேவியின் அறை கதவு நீண்டநேரமாகியும் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது சகோதரி அறை கதவை திறந்து உள்ளே சென்றார்.

தற்கொலை

அப்போது, துர்காதேவி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வாலிபருடன் பேசியதை தாய் கண்டித்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசுக்கு தெரியாமல் உறவினர்கள் துர்காதேவியின் உடலை சுடுகாட்டுக்கு கொண்டு சென்று தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

இந்த தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை தகனம் செய்யாமல் தடுத்தனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பரபரப்பு

தற்கொலை செய்த மாணவியின் உடலை போலீசுக்கு தெரியாமல் அடக்கம் செய்ய முயன்ற சம்பவம் அக்கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story