பஸ்சிருந்து தவறி விழுந்து பிளஸ்-1 மாணவர் படுகாயம்


பஸ்சிருந்து தவறி விழுந்து பிளஸ்-1 மாணவர் படுகாயம்
x

பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்த பிளஸ்-1 மாணவன் தவறி விழுந்த படுகாயம் அடைந்தார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு

பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்த பிளஸ்-1 மாணவன் தவறி விழுந்த படுகாயம் அடைந்தார்.

திமிரியை அடுத்த மோசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமலம். பஸ் டிரைவர். இவரது மகன் தினகரன் (வயது 17), ஆற்காட்டில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

நேற்று காலை ஆரணியில் இருந்து விளாபாக்கம் வழியாக ஆற்காடு நோக்கி வரும் அரசு பஸ்சில் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார்.

விளாப்பாக்கத்தை அடுத்த உப்புப்பேட்டை அருகே வரும்போது பஸ்சிலிருந்து தவறி கீழே விழுந்த அவர் மீது பஸ்சின் சக்கரம் ஏறியதில் காலில் உள்ள கட்டை விரல் நசுங்கி உள்ளது. உடனே பஸ் நிறுத்தப்பட்டு தினகரனை பயணிகள் மீட்டனர்.

உடனடியாக தினகரனை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story