பிளஸ்-2 தேர்வு; மாவட்டம் முழுவதும் 73 மையங்களில் 22 ஆயிரத்து 69 பேர் எழுதுகின்றனர்


பிளஸ்-2 தேர்வு; மாவட்டம் முழுவதும் 73 மையங்களில் 22 ஆயிரத்து 69 பேர் எழுதுகின்றனர்
x

பிளஸ்-2 தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. நெல்லை மாவட்டம் முழுவதும் 73 மையங்களில் 22 ஆயிரத்து 69 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

திருநெல்வேலி

பிளஸ்-2 தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. நெல்லை மாவட்டம் முழுவதும் 73 மையங்களில் 22 ஆயிரத்து 69 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

பிளஸ்-2 தேர்வு

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் பிளஸ்-2 தேர்வுக்காக மொத்தம் 73 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் என மொத்தம் 183 பள்ளிகளை சேர்ந்த பிளஸ்-2 மாணவ-மாணவிகள் 22 ஆயிரத்து 69 பேர் தேர்வு எழுதுகின்றனர். சிறைக்கைதிகள், தனித்தேர்வர்களுக்காக 4 தனியார் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

போலீஸ் பாதுகாப்பு

தேர்வையொட்டி மாவட்டத்தில் 5 பள்ளிகளில் வைக்கப்பட்டு உள்ள வினாத்தாள் கட்டுகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்வு பணிகளில் சுமார் 1,500 ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.

இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு வினாத்தாள்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டு தேர்வு மையங்களில் ஒப்படைக்கப்பட உள்ளன. தேர்வில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் பறக்கும்படையினர் மற்றும் நிலையான குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

தூய்மை பணிகள்

பிளஸ்-2 தேர்வு தொடங்குவதையொட்டி மாநகர பகுதியில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வறைகளில் பதிவு எண்கள் ஒட்டும் பணி முடிவடைந்து விட்டது.

நெல்லை மாநகர பகுதியில் உள்ள பள்ளி வளாகங்களை சுத்தப்படுத்தும்படி மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார். அதன்பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில், நெல்லை மண்டலத்துக்குட்பட்ட தேர்வு மையங்களில் தூய்மை பணிகள் நேற்று நடைபெற்றது.

நெல்லை டவுன் கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டது. மேலும் அங்குள்ள வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணியும் நடைபெற்றது.

இதேபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள பிளஸ்-2 தேர்வு மையங்களில் சுகாதார அதிகாரிகள் மேற்பார்வையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.


Next Story