பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு:ஈரோடு மாவட்டத்தில் 96.98 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சிமாநில அளவில் 8-ம் இடத்தை பிடித்தது


பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு:ஈரோடு மாவட்டத்தில் 96.98 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சிமாநில அளவில் 8-ம் இடத்தை பிடித்தது
x

பிளஸ்-2 பொதுத்தேர்வுவில் ஈரோடு மாவட்டத்தில் 96.98 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனா்.

ஈரோடு

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஈரோடு மாவட்டத்தில் 96.98 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதன் மூலம் மாநில அளவில் ஈரோடு மாவட்டம் 8-ம் இடத்தை பிடித்தது.

96.98 சதவீதம் தேர்ச்சி

தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 22 ஆயிரத்து 923 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி இருந்தனர். இதில் 22 ஆயிரத்து 231 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 96.98 சதவீதமாகும்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆண்கள் பள்ளிக்கூடத்தில் படித்த 2 ஆயிரத்து 219 பேர் தேர்வு எழுதியதில் 2 ஆயிரத்து 86 பேரும், பெண்கள் பள்ளிக்கூடங்களில் படித்து தேர்வு எழுதிய 4 ஆயிரத்து 404 பேரும் வெற்றி பெற்றனர். இருபாலர் பள்ளிக்கூடங்களில் படித்த 16 ஆயிரத்து 300 பேர் தேர்வு எழுதியதில் 15 ஆயிரத்து 884 பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர். சதவீதத்தில் இருபாலர் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் 97.45 சதவீதம் தேர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

சுயநிதி மெட்ரிக் பள்ளிக்கூடங்கள்

சுயநிதி மெட்ரிக் பள்ளிக்கூடங்களில் 3 ஆயிரத்து 812 மாணவர்கள், 3 ஆயிரத்து 611 மாணவிகள் தேர்வு எழுதியதில் 3 ஆயிரத்து 802 மாணவர்கள், 3 ஆயிரத்து 606 மாணவிகள் தேர்ச்சி அடைந்தனர். இது 99.80 சதவீதமாகும். சுயநிதி பள்ளிகளில் (மாவட்ட கல்வித்துறை கட்டுப்பாடு) படித்த 693 மாணவர்கள், 471 மாணவிகள் தேர்வு எழுதியதில் 688 மாணவர்கள், 467 மாணவிகள் தோல்வி அடைந்தனர். அது 99.23 சதவீதமாகும். பழங்குடியினர் நலத்துறை பள்ளிக்கூடங்களில் 61 மாணவர்கள், 49 மாணவிகள் தேர்வு எழுதியதில் 56 மாணவர்கள், 46 மாணவிகள் தேர்ச்சி அடைந்தனர். இது 92.73 சதவீதமாகும்.

8-வது இடம்

மொத்தமாக 10 ஆயிரத்து 753 மாணவர்கள், 12 ஆயிரத்து 170 மாணவிகள் தேர்வு எழுதியதில், 10 ஆயிரத்து 353 மாணவர்கள், 11 ஆயிரத்து 878 மாணவிகள் தேர்ச்சி அடைந்தனர். மாணவர்கள் 96.28 சதவீதமும், மாணவிகள் 97.60 சதவீதம் தேர்ச்சி அடைந்தனர். இது ஒட்டு மொத்தமாக 96.98 சதவீதம் தேர்ச்சியை ஈரோடு மாவட்டம் பெற்றதன் மூலம் மாவட்ட அளவில் 8-ம் இடத்தை பிடித்தது.

களை கட்டின

தேர்வு முடிவுகள் வெளியானதையொட்டி நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கூடங்கள் களை கட்டின. மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு வந்து தங்கள் தேர்வு முடிவை நண்பர்கள், ஆசிரியர்களிடம் தெரிவித்து வாழ்த்து பெற்றனர். ஆசிரிய-ஆசிரியைகள் தங்கள் மாணவர்களை வாழ்த்தி பாராட்டினர். செல்போன்கள், இணைய வழி மாணவ-மாணவிகள் தங்கள் மதிப்பெண்களை ஆர்வமுடன் பார்த்து தெரிந்து கொண்டனர்.


Next Story