பிளஸ்-2 மாணவி தற்கொலை


பிளஸ்-2 மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 25 Aug 2023 12:15 AM IST (Updated: 25 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்

விருதுநகர்

சிவகாசி அருகே உள்ள பெரியார்காலனியை சேர்ந்தவர் மாரி முத்து. இவரது மகள் முருகலட்சுமி (வயது17). இவர் திருத்தங்கலில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று மாணவி முருகலட்சுமி தனது வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த மாணவியின் தந்தை மாரிமுத்து சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story