பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்


தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர் காகிதப்பட்டறை பள்ளத்தெருவை சேர்ந்தவர் இன்பவள்ளி. இவருடைய மகள் சங்கரி (வயது 17), தோட்டப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2் படித்து வந்தார். நேற்று முன்தினம் மாணவி பள்ளிக்கு செல்லவில்லை.

அப்போது அவரது தாயார் துணி துவைக்கவில்லை எனக் கூறி மாணவியை கண்டித்ததாகவும் இதனால் மாணவி மனமுடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே மதியம் மாணவியின் தாயார் வெளியே சென்றார். அந்த நேரத்தில் தனியாக இருந்த சங்கரி வீட்டில் உள்ள அறையில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்கு திரும்பி வந்த மாணவியின் தாயார் மகள் தூக்கில் தொங்குவதைபார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.

தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் திட்டியதால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story