தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவர் தற்கொலை


தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவர் தற்கொலை
x

கீழக்கரையில் தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

ராமநாதபுரம்

கீழக்கரை,

கீழக்கரை வடக்கு தெருவை சேர்ந்தவர் பதுருஉஸ்மான். இவருடைய மகன் சதக்கத்துல்லா(வயது 17). இவர் கீழக்கரை தெற்கு தெருவில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல மாணவன் பள்ளிக்கு சென்றான். மதியம் வீடு திரும்பிய மாணவன் பள்ளிக்கு செல்லாமல் பகல் 3 மணி அளவில் வீட்டில் தாயாரின் சேலையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கினான். இதை பார்த்த தாயார் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து மாணவனை மீட்டு ஆட்டோவில் கீழக்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே மாணவன் இறந்ததாக தெரிவித்தார். இது குறித்து கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story