பிளஸ்-2 மாணவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை


பிளஸ்-2 மாணவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
x

ஆம்பூர் அருகே பிளஸ்-2 மாணவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே பிளஸ்-2 மாணவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளஸ்-2 மாணவி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பெரியாங்குப்பம் கீழ்காலனி மாரியம்மன் கோவில் தெருவ சேர்ந்தவர் செல்வம். ஆம்பூர் நகராட்சியில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவரது மகள் கேஸ்டியா (வயது 17). இவர் ஆம்பூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

தொடர்ந்து மூன்று நாட்கள் பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த மாணவி கேஸ்டியா விண்ணமங்கலம்- ஆம்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே பெரியங்குப்பம் என்ற இடத்தில், ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திலிருந்து, காட்பாடி நோக்கி சென்ற ஏதோ ஒரு ரெயில் முன் பாய்ந்துள்ளார்.

தற்கொலை

இதில் அவர் உடல் சிதறி சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, ஏட்டு பெல்சியா மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரோத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவுசெய்து மாணவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story