அண்ணன் திட்டியதால் பிளஸ்-2 மாணவி தற்கொலை


அண்ணன் திட்டியதால் பிளஸ்-2 மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 10 Jun 2023 12:15 AM IST (Updated: 10 Jun 2023 3:52 PM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே அண்ணன் திட்டியதால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்:

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.மழவராயனூர் கிராமத்தை சேர்ந்தவர் யேசுடையான். இவரது மகள் ஜெயஸ்ரீ (வயது 16). இவர் திருவெண்ணெய்நல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இவர், தனது வீட்டில் சமையல் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது அண்ணன் திட்டியுள்ளார்.

இதில் மனமுடைந்த ஜெயஸ்ரீ, வீட்டில் இருந்த பேன் மருந்தை சாப்பிட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story