கணித தேர்வு பயத்தில் பிளஸ்-2 மாணவி தற்கொலை
லால்குடி அருகே கணித பாட தேர்வு பயத்தில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
லால்குடி அருகே கணித பாட தேர்வு பயத்தில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிளஸ்-2 மாணவி
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகள் தேவிபிரியா (வயது 17). இவர் சமயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மேலும் இவர் கணித பாடத்தை கற்றுக்கொள்வதில் சிரமம் அடைந்து வந்தார். எத்தனை முறை படித்தாலும் கணித பாடம் அவருக்கு புரியாமல் இருந்து வந்தது. மேலும் அவர் கணித பாடம் தனக்கு புரியவில்லை என தோழிகள் உள்ளிட்டவர்களிடம் கூறியதாக தெரிகிறது.
இதற்கிடையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வந்த நிலையில் நேற்று கணித தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு மீது உள்ள பயத்தில் நேற்று காலையில் வீட்டில் உள்ள அறையில் தேவிபிரியா தூக்குப்போட்டு கொண்டார்.
சாவு
இதைக்கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணித பாட தேர்வு பயத்தில் மாணவி தேவி பிரியா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.