வெயிலில் விளையாடக்கூடாது என பெற்றோர் கூறியதால் பிளஸ்-2 மாணவன் தற்கொலை
வெயிலில் விளையாடக்கூடாது என பெற்றோர் கூறியதால் விரக்தி அடைந்த பிளஸ்-2 மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வாடிப்பட்டி,
வெயிலில் விளையாடக்கூடாது என பெற்றோர் கூறியதால் விரக்தி அடைந்த பிளஸ்-2 மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பிளஸ்-2 மாணவன்
மதுரை மாவட்டம் சமயநல்லூர் காந்தி நகரை சேர்ந்தவர் காமேஸ்வரன். இவருடைய மகன் தேவ்ஆனந்த் பாண்டியன் (வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 முடித்து விட்டு தற்போது பிளஸ்-2 செல்ல இருந்தார். சம்பவத்தன்று தேவ்ஆனந்த் பாண்டியன் தனது நண்பர்களுடன் விளையாட சென்று வந்தார்.
இதையடுத்து அவர் மீண்டும் விளையாட செல்ல முயன்றார். ஆனால் வெயில் அதிகமாக இருப்பதால் வெளியில் விளையாட செல்லக்கூடாது என அவருடைய தந்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
இதனால் விரக்தி அடைந்த தேவ் ஆனந்த் பாண்டியன் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்ே்றார் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் தேவ்ஆனந்த் பாண்டியன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாமகேஷ், சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.