பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை


பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை
x

நச்சலூர் அருகே பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

பிளஸ்-2 மாணவி

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம் நச்சலூர் அருகே உள்ள முதலைப்பட்டி மொட்டை பழனி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மனைவி கனகா. இந்த தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களது மூத்த மகள் ரம்யா (வயது 17). இவர் அயிலாபேட்டை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார்.இந்தநிலையில் கடந்த 20-ந் தேதி வீட்டில் இருந்த ரம்யா செல்போன் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். இதனால் ரம்யாவை தாய் கனகா திட்டி விட்டு தனது தோட்டத்திற்கு வேலைக்கு சென்று விட்டார்.

தற்கொலை

இதனால் மனமுடைந்து காணப்பட்ட ரம்யா விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைக்கண்ட உறவினர்கள் ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி ரம்யா நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story