பிளஸ்-2 மாணவி கிணற்றில் தவறி விழுந்து பலி
பிளஸ்-2 மாணவி கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.
வாணியம்பாடி
பிளஸ்-2 மாணவி கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.
வாணியம்பாடியை அடுத்த தும்பேரி அண்ணாநகர் இளையான் வட்டம் பகுதியை சேர்ந்த திருமால் என்பவரின் மகள் இலக்கியா (வயது 17). இவர் தும்பேரி அரசுப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று பிற்பகல் அவர்களுக்கு சொந்தமான நிலத்திற்கு சென்று விவசாய கிணற்றின் அருகில் துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வழுக்கி கிணற்றில் தவறி விழுந்து விட்டார். சத்தத்தை கேட்டு அருகில் இருந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஓடி வந்து பார்ப்பதற்குள் தண் ணீரில் மூழ்கினார். தகவலறிந்த வாணியம்பாடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்கள் உதவியுடன் கயிற்றின் மூலம் தண்ணீரில் மூழ்கிய மாணவியை பிணமாக மீட்டனர்.
இதைப்பார்த்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது. பின்னர் உடலை கைப்பற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து அம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.