பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம்


பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம்
x

வேப்பூர் அருகே பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கடலூர்

கடலூர்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் பட்டுதுறை கிராமத்தைச் சேர்ந்தவர் அமாசி மகன் பூவரசன் (வயது 20). இவர் வேப்பூர் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதாக தெரிகிறது. அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த பிளஸ்-2 மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. சம்பவத்தன்று அந்த மாணவி தாவரவியல் தேர்வு எழுதிவிட்டு வந்தார்.

அப்போது அவரிடம் பூவரசன் ஆசை வார்த்தை கூறி அவரது வீட்டிற்கு கடத்தி சென்றார். பின்னர் அவரது வீட்டில் வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் மாணவியின் தாய் அங்கு சென்று அவரை அழைத்து வந்தார். இது பற்றி அவரது தாய் சிறுபாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பூவரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வருகின்றனர்.


Next Story