வயிற்று வலியால் அவதிப்பட்ட பிளஸ்-2 மாணவி கர்ப்பம்


வயிற்று வலியால் அவதிப்பட்ட பிளஸ்-2 மாணவி கர்ப்பம்
x

புதுக்கடை அருகே வயிற்றுவலி சிகிச்சைக்கு சென்ற பிளஸ்-2 மாணவி கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக காதலன் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

குளச்சல்:

புதுக்கடை அருகே வயிற்றுவலி சிகிச்சைக்கு சென்ற பிளஸ்-2 மாணவி கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக காதலன் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிளஸ்-2 மாணவி

புதுக்கடை அருகே உள்ள பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவி ஒரு பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது. மேலும் அவருடைய வயிறு வழக்கத்தை விட பெரிதாக இருந்தது.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் மாணவியை பெற்றோர் சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் மாணவியை பரிசோதித்த போது அவர் கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து டாக்டர்கள் குளச்சல் மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மகளிர் போலீசார் மாணவியை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அதிர்ச்சியான தகவல் தெரிய வந்தது.

தச்சு தொழிலாளியுடன் காதல்

அதாவது இந்த மாணவிக்கும் புதுக்கடையை சேர்ந்த தனீஸ் (வயது23) என்ற தச்சு தொழிலாளிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனீஸ்மாணவியை தனியாக அழைத்து சென்று பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அத்துடன் தொடர்ந்து பல முறை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதில் மாணவி கர்ப்பமாகி உள்ளார்.

இதையடுத்து காதலன் தனீஸ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story