மது குடித்த பிளஸ்-2 மாணவர் திடீர் சாவு


மது குடித்த பிளஸ்-2 மாணவர் திடீர் சாவு
x
தினத்தந்தி 28 Sept 2022 12:15 AM IST (Updated: 28 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மது குடித்த பிளஸ்-2 மாணவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராமநாதபுரம்

கமுதி,

மது குடித்த பிளஸ்-2 மாணவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிளஸ்-2 மாணவர்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள போத்தநதி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன் கவுதம் (வயது 17). பிளஸ்-2 மாணவர்.

சம்பவத்தன்று மாலையில், இவர் தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து மது குடித்துள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்ற கவுதம் மது போதையில் வாந்தி எடுத்துள்ளார். இதனால் பதறிப்போன அவருடைய தாயார் சித்ராதேவி, உறவினர்கள் உதவியுடன் கவுதமை மண்டலமாணிக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார்.

சாவு

அங்கு சிகிச்சை பெற்றுவிட்டு வீட்டிற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இரவு 9 மணி அளவில் கவுதம் சுயநினைவின்றி கிடந்துள்ளார். உடனே அவரை கமுதி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே கவுதம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து சித்ராதேவி அளித்த புகாரின் பேரில் மண்டலமாணிக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மது குடித்த மாணவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story